Wednesday, March 28, 2018

அற்புதமான மொழி தமிழ்: வெங்கையா நாயுடு புகழாரம்

எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் 6000 மாணவர்கள் பட்டயம் பெற்றனர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கலையியல், மருத்துவம் மற்றும் உடல்நல அறிவியல், வேளாண்மையியல் பயின்ற மாணவர்களுக்கு இளநிலை, முதுநிலைப் பட்டங்களும், 40 பேருக்கு முனைவர் பட்டமும், கல்வி நிலையில் சாதனை படைத்த 185 மாணவர்களுக்கு, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

விழாவின் போது பேசிய துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, நண்பர்களே. உங்களின் அழகான, சிறந்த மொழியான தமிழில் என்னால் பேச இயலவில்லை. அதனால் மன்னிக்கவும். பழமையான, அற்புதமான மொழி தமிழ். நீங்கள் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் பெற்றோர், அண்டை வீட்டாரிடம் தாய்மொழியில் பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.




No comments: