மூன்றாவது தமிழிணைய மென்பொருள் தொகுப்பை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தில், தமிழ் மென்பொருள் உருவாக்கும் திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில், 2015ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ஏற்கனவே, தமிழிணைய மென்பொருள் தொகுப்பு, 1 மற்றும் 2, வெளியிடப்பட்டுள்ளன.புதிதாக, தமிழிணையம் அகராதி தொகுப்பு, சொற்றொடர் தொகுப்பு, கருத்து களம் தொகுப்பு, சொல் பகுப்பாய்வு, தமிழ் பிழை திருத்தம் என, ஐந்து தமிழ் மென்பொருட்கள் அடங்கிய, 'தமிழிணைய மென்பொருள் தொகுப்பு - 3' உருவாக்கப்பட்டுள்ளது.இத்தொகுப்பை, முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம், சென்னை, தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். இந்த மென்பொருள் தொகுப்பு, தமிழ் எழுத்துகளை தட்டச்சு செய்யும்போது, எழுத்துப் பிழைகளை கண்டறிந்து, அவற்றை திருத்தம் செய்ய உதவும். மென்பொருள் தொகுப்பை, தமிழ் இணைய கல்விக் கழக இணையதளத்தில், தேவையானதரவுகளை உள்ளீடு செய்து, இலவசமாக பயன்படுத்தலாம்.
பார்க்க இணைப்பு : http://www.tamilvu.org/
htttp://www.tamilvu.org/ta/content/தமிழ்க்-கணினிக்-கருவிகள்
No comments:
Post a Comment