எகிப்தில் உள்ள நைல் நதியில் உள்ள வெள்ளை நிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் தன் இதழ் மூடும். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் முடச்சிக்காடு கிராமம் அருள்மிகு சிவலிங்க சித்தி விநாயகர் கோவில் குளத்தில் மலர்ந்துள்ள அல்லி மலர். திருவாசகத்தில் மாணிக்கவாசகர்,
`பூ அல்லி கொய்யாமோ' என்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த அல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு. இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம், பொய்கை நீர்ச்சுனை, மெதுவாக ஓடும் ஆறுகளில் வளரக்கூடிய ஒரு கொடியாகும். தாமரை மலர் போன்று காணப்படும் இது. ஆனால், தாமரை காலையில் மலர்ந்து இரவில் அதன் இதழ்கள் மூடிக்கொள்வதுபோல அல்லியின் இதழ்கள் இரவில் மலர்ந்து காலையில் இதழ் மூடிக்கொள்ளும்.நீரில் மிதக்கக்கூடிய அகன்ற நீள்வட்ட இலைகளும் மெல்லிய குழலையும் கொண்ட அல்லி வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. அல்லியின் இலை, பூ, விதை, கிழங்கு மருத்துவக்குணம் நிறைந்தவை.
No comments:
Post a Comment